ராஜேஸ்வரி சண்முகம்
வானொலியில் ஒலித்ததொரு குலல்; உலகையே வானொலியை நொக்கித் திரும்பிப் பார்க்கச் செய்தது. அவர் வணக்கம் என்று சொன்னால் தமிழ் மணக்கும் இனிமை,ஒலிநயம்,உச்சரிப்பு என வானொல் நேயர்களைத் குரலின் வசியத்தால் கட்டிப் போட்டவர். தலைக் கனத்தில் பூச்சியம், அவர்தழிழ் இலக்கணத்தில் ராஜ்ஜியம். அவர்தான் ராஜேஸ்வரி சண்முகம்.
இலங்கை வானொலி தமிழ் வானொலியில் ஒலிபர்ப்பில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் மழலையை விட இனிமையாக மொழி பேசியவர்;. 1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி கொழும்பு கொட்டாஞசேனையில் ராஜேஸ்வரி சண்முகம் பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை ஆங்கில மொழியிலி கற்ற இவர் தமிழில் புகழ் பூத்த அறிவிப்பாளராக விளங்கினார். இவர் 1952 ஆம் ஆண்டுதனது 14 ஆவது வயதில் வானொலிக் கலையகத்திற்கு காலடி எடுத்து வைத்த ராஜேஸ்வரி சண்முகம் எஸ்.எம் ராமையா எழுதிய விடிவெள்ளி நாடகம் மூலமாக தனது திறமையை வெளிக்காட்டிய ராஜேஸ்வரி சண்முகம் புதிய உருவமாக ஊருவெடுத்தார்.
நூற்றுக் கணக்கான நாடகங்களில் நடித்து தனது மதுரக் குரலினால் மக்களை மயக்கிய ராஜேஸ்லரி சண்முகம் 1969 ஆம் ஆணடில் இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கொண்டார்.
1971 ஆம் ஆண்டு மாதர்,சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக செயற்பட்ட இவர் 1974 ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் நிரந்தர அறிவிப்பாளராகத் தெரிவு செய்யப் பட்டார்.
1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதற்தர அறிவிப்பாளராகத் தகுதி பெற்றார். வயது போனாலும் சிலருக்க இளமை போவதில்லை. ராஜேஸ்வரி சண்முகத்தினைப் கொறுத்த வரைக்கும் வயது போகப் போக அவரின் குரலின் இனிமைமேலும் அதிகரித்தது.
1994 ஆம் ஆண்டுஇலங்கை வானொலியின் மேலுயர் அறிவிப்பாளராகத் தெரிவு செய்யப் பட்டார். அதே ஆண்டில் சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருதும் இவருக்குக் கிடைத்தது.
1995 ஆம் ஆண்டுடொக்ரர் புரட்சித்தலைவி விருது ஜெயலலிதாவினால் ராஜேஸ்வரி சண்முகத்திற்கு வழங்கப்பட்டது;
மொழி வளர் செல்வி என்ற பட்டமும் கலாசார அமைச்சினால் இவருக்கு வழங்கி வைக்கப் பட்டது. ஐரோப்பாவின் பிரான்ஸ்,டெனடமார்க், சுவிஸ்,ஜேர்மன்,லண்டன் போன்ற நாடுகளில் ராஜேஸ்வரி சண்முகத்திற்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டன.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரால் தொடர்பியர் வித்தகர் என்ற பட்டமும் எட்டயபுரம் தொன்பதி தமிழ் சங்கத்தினால் வானொலிக் குயில் என்ற பட்டமும் வழங்கி வைக்கப் பட்டது.
விருதுகளும்,பதக்கங்களும், பரிசுகளும் இவரைத் தேடிச்சென்று அவரின் கௌரவத்தினைக் கூட்டிச் சென்றன. எத்தனையோ பட்டங்கள் பெற்ற போதிலும் தமபட்டம் இல்லாமல் தயவுடன் பழகிய ராஜேஸ்வரி சண்முகம் அறிவிப்புத் துறையில் மூத்தோர் முதல் அனைவராலும் அம்மா என்று கௌரவமாக அழைக்கப் பட்டார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் 50 வருடங்களுக்க மேலாக சேவை புரிந்த ராN;ஜஸ்வரி சண்முகம் உலகின் தலை சிறந்த பெண் அறிவிப்பாளராகப் பாராட்டுப் பெற்றுள்ளார்.
லட்சக் கணக்கான,மில்லியன் கணக்கான தமிழ் பேசும் உலக நேய நெஞ்சங்களில் ந{ந்காத இடத்தினைப் பெற்ற அம்மா எனப்படும் ராஜேஸ்வரி சண்முகம் வானொலி நேயர்களினது ஒரு சொத்து என பிரபல கவிஞன் கவிப் பேரரசு வைரமுத்து வாழ்த்தியுள்ளார்.
நேயர்களின் சொத்தாக மட்டுமன்றி ,ஒலிபரப்பாளர்களின் சொத்தாக மட்டுமின்றி,ஒலிபரப்புத் துறையின் முத்தாகவும் இருந்த ராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியின் கால வெள்ளத்தால் அழியாத கல்வெட்டாக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஒரு காலத்தில் இவரது குரல்களே ஒலிக்காத விளம்பரங்களே இல்லை எனுமளவிற்கு அவரது புகழ் வானலை வழியே வான் எல்லைகளையும் தொட்டிருந்தது.
விளமபர நிகழ்ச்சி,சமய நிகழ்ச்சி,கல்வி நிகழ்ச்சி, செய்திவாசிப்பு, நேர்காணல்,மேடை நிகழ்ச்சி, பொழுது போக்கு நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாகச் செய்யக் கூடிய திறமைகள் பூத்துக் குலுங்கும் நந்தவனமாக ராஜேஸ்வரி சண்முகம் காணப்பட்டார்.
சினிமா நட்சத்திரங்களும்,உலகப் பிரபலங்களும் இவருக்கு பேட்டி கொடுத்து தமது புகழை உயர்த்திக் கொள்ள ஆசைப்பட்டனர்.
தனது இறுதி மூச்சு வரை வானொலியோடு இணைந்திருந்து கலைத்துறை ம{தான தனது பற்றை பறை சாற்றியவர் ராஜேஸ்வரி சண்முகம்.அவரிடம் அறிவிப்புக் கலையைக் கற்றவர்கள் ஏராளம்.
இன்று அவரது மாணவர்கள் இல்லாத ஊடகங்களே இல்லை எனலாம். இலங்கை வானொவியிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும் இவரது குரல் கலைத் துறையிலிருந்து ஓய்வு பெறவில்லை.
தள்ளாத வயதிலும் நில்லாது தமிழ்த் தொண்டாற்றியவர் ராஜேஸ்வரி சண்முகம். 70 வயதுகளிலும் இவர் வானொலி நிகழ்ச்சிகளுக்குக் குரல் கொடுத்து வந்தார். பல நிகழ்ச்சிகளுக்குக் குரல் கொடுத்து வந்தார்.
பல நிகழ்ச்சிகளுக்கு வரையறை அமைக்கும் அளவு கோலாகவும் செயற் பட்டார் ராஜேஸ்வரி சண்முகம். இசைவன் அவருக்கும் வரையறை வைத்தான். ராஜேஸ்வரி சண்முகம் தமது 72 ஆவது வயதில் மார்ச் மாதம் 22ஆம் திகதி மௌனத்தனைச் சொந்நமாக்கியது.
யாழ் போதனா வைத்திய சாலையில் வைத்து இவர் இறையடி சேர்ந்தார். அவரது இழப்பு இலங்கை வானொலித் துறைக்கு பேரிழப்பாகும். ராஜேஸ்வரி சண்முகம் உலகை விட்டுப் பிரிந்தாலும் அவரது குரல் இன்றும் ஒலியலைகளில் ர{ங்காரமிடுகின்றன.
ராஜேஸ்வரி சண்முகம் அறிவிப்புத் துறையின் ஓர் பல்கலைக் கழகமாகும். அவரது ஒவ்வொரு அசைவும் அனுபவமும் ஏனைய மாணவர்களுக்குப் பாடத்திட்டமாகும்.
பெண்ணாகப் பிறந்து தமிழ் மண்ணெங்கும் சொல்லாட்சி புரிந்த வானொலிப் புயல். ராஜேஸ்வரி சண்முகம் வானொலிஒலிபரப்புத் துறையின் மகுடத்தின் மேல் மகுடம் சூட்டிய மாணிக்கமாகும்.
எழுத்துருவாக்கம்
திருமதி : துஷியந்தன் கிருசாந்தினி
No comments:
Post a Comment