Monday, March 4, 2013

ஷேக்ஸ் பியர்


ஷேக்ஸ் பியர்




உலக மெகழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனிச்சிற்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழிற்கு ழ  என்னும் எழுத்துச் சிறப்பு. அதே போல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்புண்டு. ஆகக் குறைவாக 26 எழுத்துக்களைக் கொண்ட எழிய மொழி என்பது தான் அந்தத் தனிச் சிறப்பு. அதனாலே தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக்கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்தவர்கள் சிலர். அவர்களுள் 12 வயது வரை பள்ளி சென்ற ஆங்கில இலக்கிய மேதையும் உலகிற்கு யார் என்று தெரியாத காலப்பகுதியில் குதிரை வண்டிக்கும் காவல் காரனுமாக இருந்து தனது கேள்வி ஞானம் மூலம் பிற் காலத்தில் ஆங்கில இல்க்கியத்தை  மாற்றிப் போட்டு இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களும் கல்;லூரிகளும் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக்கொண்டிருக்கும் பல அமர இலக்கியங்களைத் தந்த ஆங்கில இலக்கிய மேதை உலகின் அமரகவி என அழைக்கப்படுபவருமான
ஷேக்ஸ்பியர்



1564ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி ஸ்ராட் போட் அபான் அவான் எனும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற் பெயர் வில்லியம் ஷேக்ஸ் பியர். இவர் ஏழ்மையான குடும்பத்தில் ஏழு சகோதரர்களில் மூன்றாவதாப் பிறந்தார். ஒரு சாதாரண கையுறைத் தையல் வியாபாரியான ஜோன் ஷேக்ஸ்பியருக்கு மகனாகப் பிறந்ததால் தந்தையின் வருமானம் போதாமையினாலும் 12 வயது வரை மட்டுமே  பள்ளி செல்லும் வாய்ப்ப இவருக்குக் கிடைத்தது. அவரது விடா முயற்சியாலும் கல்வியில்கொண்ட ஆர்வத்தாலும் 12 வயதிலேயே முறையான கல்வி கற்க முடியாமல் போனாலும் இலத்த{ன் மொழியில் இலக்கண இலக்கியத்தைக் கற்றார்.

ஷேக்ஸ்பியர் தனது 18ஆம் வயதில் தன்னை விட 8 வயது கூடிய ஆன் ஹத் வேயை மணந்து கொண்டார். இவரது 23ஆம் வயதில் இவர்களுக்கு 3 பிள்ளைகள் பிறந்தனர். 1587 ஆம் ஆண்டு இவர் பிழைப்பைத் தேடி இலண்டன் மாநகரை வந்தடைந்தார்.



இக்காலப் பகுதியில் நாடகங்களுக்குப் புகழ் பெற்று விளங்கிய நகரமாக லண்டன் மாநகரம் விளங்கியது.  தினசரி சில இடங்களில் நாடகம் மேடையேறும். இவற்றைக் கண்டு மகிழ பல இடங்களிலிருந்து ச{மான்களும் செல்வந்தர்களும் குதிரை வண்டிகளில் நாடகம் பார்க்க வருவார்கள். அப்படிப்பட்ட பிரபலமான நாடகக் கம்பனியின் கொட்டகைக்கு குதிரை வண்டித் தரிப்பிடக் காரனாக வேலைக்கு அமர்த்தப் பட்டார் ஷேக்ஸ்பியர்.



 குதிரைகளைக் காவல் காத்தவாறு நாடகங்களை ரசித்த ஷேக்ஸ்பியர் அதில் வரும் வசனங்களை மனப்;பாடம் செய்தார்.

இலக்கியத்தில் நாட்டமும் திறனும் கொண்ட இவர் நாடகத்தில் வரும் வசனங்களை இப்படி மாற்றியிருந்தால்  நல்லது என்று நினைத்துக் கொள்வார். 2 அரை மணித்தியால சினிமா போல இருந்தாலும் இவரது வாழ்க்கையில் ஒரு நாள் திருப்பம் நடந்தது. அதுதான் ஆங்கில இலக்கியத்தின் திருப்பு முனையின் முதல் நாள். அன்றைய நாள் அரங்கம் நிறைந்த கூட்டம். நாடகம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் உள்ள நிலையில் நாடகத்தின் பிரதான பாத்திரம் வராததன் காரணத்தால் பதறிக் கொண்டிருந்தார் நாடக உரிமையாளர். குதிரை வண்டித் தரிப்பிடத்தில் நின்று  காவல் காத்த ஷேக்ஸ்பியரின் கதவு அன்று தான் திறக்கப்படுகிறது.

பிரதான கதாபாத்திரம் வராததைக் கேள்விப் பட்ட ஷேக்ஸ்பியர்... கம்பனி உரிமையாளரைக் கண்டு தான் அந்தக் கதா பாத்திரத்தை ஏற்று நடிப்பேன் எனக் கூறினார். வேறு நாட்களிலோ அல்லது சில மணி நேரத்தற்கு முன்பாகவோ இவர் உரிமையாளரிடம் கேட்டிருந்தால் அந்த நிர்வாகி நகைத்திருப்பார். ஆனால் சில நிமிடங்கள் இருக்கும் தருவாயில் கேட்டதால் நிர்வாகி ஒத்துக் கொள்ள அந்த நாடகத்தில் மேடையேறினார். தனது ஞாபக சக்தியால் தனக்கு முன் நடித்தவரைக் காட்டிலும் அந்தப் பாத்திரத்தை மிகவும் சிறப்பாகவும் தான் மாற்ற நினைத்த வசன நடையை அந்த இடத்தில் சொந்தமாக வசனத்தைப் பேசியும் பலத்த கை தட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றார் ஷேக்ஸ்பியரது நடிப்பும் அவர் பெற்ற வரவேற்புகளும் உரிமையாளரை நெகிழ வைத்தது. இதன் அடிப்படையில் தொடர்ந்தும் நாடகங்களில் நடிக்கவும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.



இவ்வாறு சிறிய மின் மினியாக ஒளிர ஆரம்பித்த ஷேக்ஸ்பியரின் முன்னேற்றத்திற்கு ஒரு பேரிடி விழுந்தது. அது 1592ஆம் ஆண்டு லண்டன் மாநகரையே உலுக்கிய கொடிய நோய் பிளேக். இந் நோயின் காரணமாக லண்டன் நகரமே முடங்கிக் கிடந்தது;. சுமார் 2 வருட காலமாக நாடகக் கலைஞர்களுக்குப் பிழைப்பு இல்லாமல் போனது. அந்த 2 வருடத்தையும் தனது கஸ்ரமான காலமாகக் கழிக்காமல் கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து அதைப் பொற்காலமாக எண்ணி பல அமர காவியங்களைப் படைத்தார் ஷேக்ஸ்பியர். நாடகக் கதையோடு மட்டும் நிற்காமல் கவிதைகளையும் புனைந்தார். சேனட் எனப்படும் புதுவகைக் கவிதைகளையும் புனைந்து இந்த 2 ஆண்டு காலத்தில் எழுதிக் குலித்தார்.



பிளேக் நோயின் விடுதலையால் ஒளிரத் தொடங்கியது லண்டன். அக்காலப் பகுதியில் 2ஆண்டுகளிலும் எழுதிய கவிதைகள் நாடகங்கள் என்பன புத்தகமாக வெளிவரத் தொடங்கியது. 24 ஆண்டு கால இலக்கியப் பணியில் மொத்தம் 37நாடகங்களை எழுதினார் என்பதை விடப் படைத்தார் என்றும் இயற்றினார் என்றும் சொல்வது தான் பொருத்தமானதாகும். இவரது நாடகங்கள் துன்பியல் இன்பியல் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  உலகம் முழுவதும் ரோமியோ ;ஜுலியட் பெயரை உச்சரிக்காத காதலர்கள் இருந்திருப்பார்களா? என்பது சந்தேகம் தான்.....

அதே போன்று உயிர் நண்பன் புரூட்டஸ் தன்னைக் கத்தியால் குத்தும் போது அதிர்ந்து போய் ந{யுமா புரூட்டஸ்? எனக் கேட்டு உயிர் விட்ட ஜுலியஸ் ச{சரின் கதா பாத்திரத்தை  இலக்கிய உலகம் மறக்க முடியாதவாறு நிலை நிறுத்தியவர் ஷேக்ஸ்பியர். இப்படிப்பட்ட வலுவான வசனத்தாலும் களமான கதா பாத்திரத்தாலும உயிரூட்டிய கதைகள் தான் இன்று உயிரோவியமாக எம்முள் உலா வருகின்றன. தனது படைப்புக்கள் மூலம் இன்றும் எம்முள் உவாவரும் ஷேகஸ்பியரின் பேனாவிற்கு ஓய்வு தேவைப் பட்டதோ என்னவோ 1616 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அவரது பிறந்த தினத்திலேயே 52 ஆவது வயதில் இந்த இலக்கிய மேதை காவியமானார்.

ஷேக்ஸ்பியரின் .இழப்பு இலக்கிய உலகிற்கு பேரிழப்புத்தான். தமிழ் இலக்கிய உலகின் அமரகவி கம்பன் என்றால் ஆங்கில இலக்கிய அமரகவி ஷேக்ஸ்பியர் தான்.  இவரது படைப்புக்களும் அமர காவியங்களாகப் போற்றப் படுகின்றன. எழுதி 400 ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டத்துடன்  உலா வருவதால் இன்றும் உலகப் பல்கலைக்கழகங்கள் தோறும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஏழ்மையில் பிறந்து அடிப்படைக் கல்வி கூட இல்லாத ஒருவரால் உலகப் புகழ் பெற்ற காவியம் படைக்க முடிந்தால் கல்வியில் சகல வாய்ப்பு;க்களையும்  நம்மகத்தே கொண்ட நம்மால் ஏன் அது முடியாது?

இவக்கிய வானத்தை எட்டுவதற்கு அவர் திறமை மட்டும் காரணமல்ல அவர் தன் நம்பிக்கையை அதனுடன் முதலீ{டுP செய்தார். அதன் விளைவு தான்  இலக்கிய வானைத் தொட்ட இலக்கிய அமரகவி ஷேக்ஸ்பியர் என்று போற்றப் படுகின்றார். இவ்வாறான நம்பிக்கையுடன் நாமும் புறப்பட்டால் எமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்? ...........................

எழுத்துருவாக்கம்

திருமதி . துஷியந்தன் .கிருசாந்தினி    


No comments:

Post a Comment