டொக்ரர் கே. ஜே.ஜேசுதாஸ்
எப்போதெல்லாம் இசை கேட்கின்றதோ அப்போதெல்லாம் மனம் நனைந்து கரைந்து உருகும் அதிசய அநுபவத்தைப் பெறுகின்றோம். இசையானது மொழிகளுக்கும்,எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது.
எதிரியே பாடினாலும் நின்று கேட்க வைக்கும் அபார சக்தி இசைக்கு மட்டுமே சொந்தமானது. அவ்வாறான இசையை ஆட்சி செய்த இசை சாம்பிராஜ்ஜியங்கள் இன்று உலகில் இசையோடு மிடந்து இரண்டறக' கலந்து எமது மனதை மெல்லிசையால் தமது பக்கம் ஈர்த்துள்ளனர்.
இசை என்ற ஒன்றுக்கு அர்த்தம் தேடி தங்களது வாழ்க்கையையே இசைக்காய் அர்ப்பணிக்கும் ஜாம்பவான்கள் எம்முன்னே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள.
அந்தவகையில் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் என்றால் அநேகரும் இவரையே அடையாளம் காட்டுவர். தனது தெய்வ{கக் குரலால் எம் காதோரம் இசைபாடி காலமெல்லாம் தித்திக்கும் தேன் க{தங்களைத் தந்தவர்
கே.ஜே.ஜேசுதாஸ்.
இவர் 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கேரளாவில் கொச்சியில் லக்டின் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இவரின் தாயார் அகஸ்டின் ஜோசப் அலீவக்குட்டி ஆவார்.
இவரின் தந்தை ஒகஸ்டின் ஜோசப் மலையாளத்தின் மெல்லிசைக் கலைஞரும்,நடிகருமாவார். தனது ஆரம்ப இசைப்பயிற்சியினை தனது தந்தையிடமே கற்ற யேசுதாஸ் இளம் வயதிலேயே இசை ம{தான தனது ஆர்வத்தினை அத்கப்படுத்தினார்.
மிகுந்த ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த இவர் தனது தொடச்சியான இசைக் கற்றலுக்குப் பணம் கட்ட முடியாமல் பல கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப் பட்டார். எனினும் தான் பயின்ற ஒவ்வொரு பள்ளியிலும் சாதனையான மதிப்பெண்ணையும் இரட்டைத் தொகுதி உயர்வுகளையும் பெற்று இசைப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
பின்னர் தனது உயர் கல்விகளுக்காக திருவனந்த புரத்திலுள்ள .................. இசைக் கல்லூரியில் இணைந்த அவர் அக்கல்லூரியில் இசை ஜாம்பவானாக இருந்த குன்னக்குடி ச{னிவாச ஐயர், சென்னை வைத்திய நாத பகவதி போன்ற புகழ்கெற்ற ஆசிரியர்களிடம் மாண்பு மிகு மாணவனாகத் திகழ்ந்தார்.
எனினும் தனது வறுமை நிலையால் கல்விச் செலவிற்கான பணம் செலுத்த முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறினார். மேலும் திருவனந்த புரத்தில் தங்கும் வசதி இல்லாததன் காரணமாக அவர் இசை ஜாம்பவான் குன்னக்குடியின் வ{ட்டில் வாகனத்தரிப்பிடத்தில் தங்கியிருந்து கல்வி கற்றார்.
எனினும் தனது சோதனைகளைச் சாதனைளாக மாற்றுவதையே டொக்ரர் கே.ஜே ஜேசுதாஸ் ஹிந்துஸ்தானிய இசையில் தேர்ச்சி பெற்றார். இவ்வாறு பல சோதனைகளையும் தாண்டி வெற்றிக்காகக் காத்திஷரந்த யேசுதாசிற்கு 1960 ஆம் ஆண்டு விடிவு காலம் பிறந்தது.
அந்த ஆண்டில் காலப்பாகு எனும் மலையாளத்திரைப்படத்தில் முதல் முறையாகப் காட ஆரம்பித்தார். இந்த சகாப்தம் தமிழ் திரையுலகில் பொம்மை என்னும் திரைப்படத்தில் ந{யும் பொம்மை நானும் பொம்ழம எனும் பாடலோடு அறிமுகமானார்.
எனினும் அவர் பாடி முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் கொஞசும் குமரி எனும் திரைப்படமாகும். பின்னர் ஹிந்தி,தெலுங்கு கன்னடம்,பெங்காலி,ஏரியா,குஜராத்தி தொல்,மராத்தி, ஆங்கிலம், ரஷ்ய மொழி உள்ளிட்ட 14 மொழிகளுக்கு தனது தெய்வ{கக் குரவால் ஜேசுதாஸ் பாடல்களைப் பாடியுள்ளார்.
1961 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 50 வருட இசை வாழ்க்கையை டொகடரர் கே. ஜே. ஜேசுதாஸ் பூரத்தி செய்துள்ளார்.
அரை நூற்றாண்டாக தனது காந்தர்வக் குரலால் இசையுலகை ஆட்சி செய்து வருகின்ற ஜேசுதாஸ் இதுவரையில் 55000ற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.73 வயதாகும் ஜேசுதாசிற்கு அவரது குரல் சொல்லும் வயது 23. இன்னும் தனது தெய்வ{கக் குரலால் பாடும் அத்தனை பாடல்களும் ரசிகர்களின் இதயத்தைத் தாலாட்டம் என்பதில் ஐயமில்லை.
இதுவரை 7தேசிய விருதுகளை தனதாக்கிய பெருமை இவரைச் சாரும். அதிக முறை தேசிய விருது பெற்ற பாடகரும் இவரே. மேலும் 17 முறை மாநில விருது பெற்ற இவர் குறித்த விருதுகளுக்கே பெருமை சேரத்த கலைஞருமாவார்.
இவற்கு மேலதிகமாக இந்திய மத்திய அரசின் பத்ம பூசண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளும் தனது திறமையால் பெற்றுக் கொண்டார். மேலும் மாநில அளவில் கேரளம் கர்நாடகம்,ஆந்திரப்பிரதேசம், மற்றும் மேற்க வங்கஅரசிடமிருந்து மொத்தமாக 45 முறை சிறந்த திரைப்படப் பாடகர் விருதினைப் பெற்றுள்ளார்.
அது மட்டுமன்றி 2006 ஆம் ஆண்டு சென்னை ஏவி எம் அரங்கில் 4தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தினார்.
இசையுலகில் மங்காத மாணிக்கமாக ஜொலிக்கும் ஜேசுதாஸ் கான காந்தர்வன் எனவும்,தெய்வ{கப் பாடகர் எனவும் எல்லோராலும் போற்றப் படுகின்றார்.
கர்நாடக இசை,திரையிசை,பக்தியிசை என இசையின் அத்தனை ஸ்வரங்களையும் தொட்டு தன் வசப்படுத்தனார். 50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முடிசூடா மன்னனாக திகளும் ஜேசுதாஸ் இசைப்புறங்களில் ஒருவர்.
எழுத்துருவாக்கம்
திருமதி. துஷியந்தன் கிரிசாந்தின்
No comments:
Post a Comment