Friday, March 22, 2013

தஞ்சைப் பெருங்கோயில்


தஞ்சைப் பெருங்கோயில்



தமிழ் மக்களின் பாரம்பரிய சமய பண்பாட்டு கோட்பாடுகளை உலகளாவிய ர{தியில் பரப்புவதற்கு மிகப்பெரிய பங்கு வகித்த வரவாற்றுச் சின்னம். இந்து மதத்தவரின் உருவ வழிபாட்டின் கோட்பாட்டிற்கமைய அவர்களின் பாரம்பரிய மற்றும் சமய வழிபாட்டின் தொன்மைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்து மதத்தின் ஆதார சின்னமாக விளங்குவது தஞசைப்பெருங்கோயில்.




இந்தியாவின் தழிழ் நாட்டில் தஞ்சாவூர் எனும் ஊரில் தமிழர்களின் கலை கலாசாரப் பண்புகளை எடுத்துக்காட்டும் சின்னமாக தஞசைப்பெருங்கோயில் விளங்குகிறது.


கி.பி 986ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த இராஜ ராஜ சோழ மன்னன் பாண்டிய பல்லவ சாணக்கிய மன்னர்களை வெற்றி கொண்டு அவர்களின் நாடுகளைத் தன் வசப்படுத்தினான். இந்நிலையில் தமது ஆட்சியின் க{ழ் கொண்டுவந்த நகர் அனைத்தையும் ஒன்று சேர்த்து தனது புகழினைப் பரப்புவதற்காக அமைக்கப்பட்ட கோயிலே தஞசைப் பெருங்கோயிலாகும்.




 அதன் அடிப்படையில் கி.பி 1003ஆம் ஆண்டு தொடங்கிய இக் கோயிலினது கட்டுமானப் பணிகள் கி.பி 1010ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஏழு வருடங்களில் பல சிறப்புக்களுடன் கூடிய தஞ்சைப் பெருங்கோயில் அமைக்கப்பட்டது. அதற்கமைய ஆலயத்தின் முதன்மைக் கோபுரத்தின் உயரம் 215 அடி. அதாவது 65ம_ற்;றர் எனக் கணக்கிடப்பட்டுள்ளஅதன் கருவறைக்கு மேல் பகுதியில் 96அடி பரப்புள்ள அடித்தளத்தின் மேல் ஒரு சதுரக் கல்லால் உருவாக்கப்பட்டமை அதன் விசேட சிறப்பம்சமாகும



இதேவேளை குறித்த கோபுரத்தின் நிழல் எந்தவொரு காலத்திலும் நிலத்தில் படாதவாறு கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பக்கிரகத்தில் மாத்திரம் சூரிய வெளிச்சம் படும் அற்புதமான கட்டிடக்கலையால் ஆலயம் உருவாக்கப் பட்டுள்ளது. ஆலயத்தின் கருவறையில் அமைக்கப்பட்டுள்ள மூலலிங்கம் ஆவுடையார் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றது. அது விசேட ரக கல்லில் உருவாக்கப்பட்டுள்ளதோடு அதன் உயரம் 23 அடியும் சுற்றளவு 54 அடி உடையதாகவும் காணப்படுகின்றது.



மேலும் கோபுரத்தின்..உட்பகுதியில் அமர்ந்த நிலையிலுள்ள தனிக்கல்லில் செதுக்கிய நந்தி 25தொன் எடையும் 20 அடி உயரமும் 8அடி அகலமும் 20 அடி ந{ளமும் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.



கோபுரத்தின் உச்சியிலுள்ள கலசம் 3.8 ம{ற்றர்; உயரமும்  89தொன் எடையும் உடைய ஒரு தனியான 25 அடி தகரக்கல்லில் செதுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.



 குறித்த கலசத்தனை உச்சியில் அமைப்பதற்கென கல்லை 6கிலோ ம{ற்றர்; தொலைவில் இருந்து கொண்டு வந்த மகா திறமை இன்னமும் புரியாத புதிராக உள்ளது. இதுவே அவ் ஆலயத்தின் அழியாத புகழுக்கு காரணமாகும்.


 தஞ்சைப் பெருங்கோயில் கட்டுவதற்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட கற்களின் மொத்த அளவு ஈசாக் பிரமிட் கட்டுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கற்களின் அளவை விட அதிகமாகும் என ஆய்வாளர்கள் கணிப்பிட்டுள்ளனர். குறித்த ஆலயத்தின் பரப்பானது 200 தாஜ்மகாலை உள்ளடக்கும் அளவிற்கு விசாலமானதாகவும் பிரமாண்டமானதாகவும் காணப்படுகின்றது.

 இதேவேளை கோயிலின் பல இடங்களில் கல்வெட்டுக்கள் மற்றும் சிற்பங்கள் என்பன தென் படுவதாகவும் அவை அனைத்தும் இராஜ ராஜ சோழனின் காலத்திற்குரியதெனவும் சொல்லப் படுகின்றது.







எனினும் அவற்றில் 107 கல்வெட்டு வசனங்கள் 108  தாண்டவ வடிவங்கள் மற்றும் சமய நாயன் மார்களின் வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன.











 ஆலயத்தின் வெளிப்பகுதியில் சோழப்பேரரசன் மற்றும் ராஜ ராஜ சோழனின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.



 குறித்த ஆலயமானது தஞசைப் பெருவுடையார் கோயில் பெரிய கோயில் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. பல பண்டைய சிற்பக்கலை வெளிப்பாடுகளைக் கொண்ட தஞ்சைப் பெரிய கோயிலானது யுனஸ்கோவினால் உலகப் புகழ் பெற்ற கலாசாரச் சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என வர்ணிக்கப்பட்ட தஞ்சையில் அமைக்கப் பட்டுள்ள இக் கோயிலானது உலகளாவிய ர{தியில் தமிழ் மக்களின் தொன்மைச் சிறப்பினையும் அழியாப் புகழினையும் எடுத்துச் சொல்லும் வரலாற்றுச் சான்றாகும். தஞ்சைப் பெருங்கோயில் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளின் தஞ்சம்;.. ...........................................


எழுத்துருவாக்கம்
திருமதி  - துஷியந்தன்  கிருசாந்தினி





No comments:

Post a Comment