Tuesday, March 5, 2013

ஈபிள் கோபுரம்



ஈபிள் கோபுரம்





அண்மைய மதிப்ப{ட்டின் படி ஈபிள் கோபுரம் ஐரோப்பாவின் விலை மதிப்பு மிக்க நினைவுச் சின்னமாகப் பெயரிடப் பட்டுள்ளது. மேலும் பிரான்சின் பொருளாதாரத்தில் ஆண்டு தோறும் 344 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை ஈபிள் போபுரம் ஈட்டித் தருவதாக அண்மைய புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த 1887 ஆம் ஆண்டு 31 ஆம் திகதி மாச்ச் மாதம் ஈபிள் கோபுரம் திறக்கப் பட்டது. இதனை 121 வேலையாட்கள் 2வருடமும்  2மாத காலப் பகுதியிலும் கட்டி முடித்தனர்.



இது அகில உலக கண்காட்சி மற்றும் பிரெஞ்ச் புரட்சி நூற்றாண்டு நினைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப் பட்டது. 1887 ஆம் ஆண்டில் ஈபிள் கோபுரம் நிர்மாணிக்கத் தொடங்கிய காலத்தில் அதனை 20 வருடத்தின் பின்னர் இடிப்பதாகத் த{ர்மானிக்கப் பட்டது.

எனினும் குறித்த திட்டமானது கைவிடப்பட்டு தற்காலத்தில் அது நிரந்தர சின்னமாகி உலகப் புகழ் பெற்றதாக விளங்குகின்றது. கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடியாகும். அதாவது 324 ம{ற்றராகும்.



சுமார் 100 சதுர ம{ற்றர் பரப்பளவில் 8மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை அதாவது தற்போதய பெறுமதியில் 30 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் ஈபிள் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

கோபுரமானது முற்று முழுதாக 18038 விசேட இரும்புத் துண்டங்களால் உருவாக்கப் பட்டது. துண்டங்கள் அனைத்தும 2.5 மில்லியன் தரை ஆணிகளின் உதவியுடன் பொருத்தப் பட்டன. கோபுரத்தின் மொத்த இடை 10100தொன் எனக் கணக்கடப் பட்டுள்ளது.



ஒவ்வொரு 7 வுருடத்திற்கும் ஒருமுறை 60தொன் எடையுடையதும் மண் நிறமுடையதுமான வர்ணப் பூச்சு  கோபுரத்திற்குப் பூசப் படுகின்றது. கோபுரம் மொத்தம் 3தட்டுக்களைக் கொண்டு காணப் படுகின்றது.

அதில் மொத்தமாக 1665படிக் கட்டுக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு போபுரத் தட்டிலும் உணவகம், கண்காட்சி மண்டபம் தகவல் நிலையம் ஓய்வெடுக்கும் பகுதி,சுற்றுலா வெளி என்பன காணப்படுகின்றன.




ஈபிள் கோபுரத்தினது உச்சிப் பகுதி கடந்த 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்புத் சேவைக்கும் பயன்படுத்தப் படுகின்றது. அத்துடன் கோபுரத்தின் நிலையியல் பகுதியில் அரங்க வானொலியும் இயங்கி வருகின்றது.



ஈபிள் கோபுரமானது கட்டி முடிக்கப் பட்ட காலத்திலிருந்து கடந்த 1930 ஆம் ஆண்டு வரையான 40வருடங்களில் உலகின் மிக உயரமான கோபுரம் எனவும் பெயர் பெற்றிருந்தது.



கோபுரத்தின் அடிப்பகுதியில் 4முகப்புகளிலும் ஒன்றில் 18 முகப்புக்கள் வ{தம் பிரான்ஸ் நாட்டின் 72 விஞ்ஞானிகளினது பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன. பிரான்சின் ஈபிள் கோபுரமானது அந் நாட்டினை உலகளாவிய ர{தியில் அடையாளப் படுத்திக் காட்டியது.



இக் கோபுரமானது மனிதனின் சாமர்த்தியம் மிக்க தொழில் நுட்ப நகர்வுகளை உலகிற்கு எடுத்துக் காட்டி இன்றும் அசையாமல் உயர்ந்து நிற்கின்றது. உலகில் இன்றும் தலை நிமிர்ந்து வாழும் ஈபிள் கோபுரம் மனித வரலாற்றின் சாதனைப் பட்டியலில் தன்னையும் இணைத்து வானுயர வாழ்கின்றது. ......................





எழுத்துருவாக்கம்
திருமதி : துஷியந்தன் கிருசாந்தினி




No comments:

Post a Comment