பர்முடா முக்கோண வலயம்
உலகில் பல மர்மமான பிரதேசங்;கள் இன்றும் அடையாளம் காணப்படாமல் வெறும் வாதங்களுடன் நின்று விடுகின்றன.விந்தை மிகு விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் மனிதன் விண்வெளியை எட்டிப்பிடித்திருந்தாலும் வேற்;றுக் கிரகங்களில் கால்தடம் பதித்திருந்தாலும் பூமியிலுள்ள சில மர்மப் பிரதேசங்களை இ;னனும் இதுவரை அவனால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அதில் கால்தடம் பதிக்கவும் இயலவில்லை; மர்மங்களுக்கான காரணங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை.அப்படி பூமியில் கண்டுபிடிக்கப்பட முடியாத மர்மமான முறையில மர்மஙகள் இடம்பெறும் ஒரு பிரதேசம் வேவுடா முக்கோணப்பிரதேசமாகும்.; இதனை பிசாசு முக்கோணம் எனவும் அழைப்பர்.
புளோரிடா ந{ரிணைப்பு மகாமகத் மற்றும மொத்தக்கரேபியன் த{வுப்பகுதி; மற்றும் அத்திலாந்திக் த{வுப்பகுதியின் கிழக்கிலிருந்து வேவுடா அத்திலாந்திக் த{லுப்பகுதி ஆகியவை குறித்த முக்கோணப் பகுதிகளின் சில எல்லைகளாகும்.குறித்த பகுதியானது உலகின் அதிகமான கப்பல் போக்குவரத்துப் பகுதியாகக் காணப்படுகின்றது இதன் வழியாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் அரேபியன் த{வுகளிலுள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன.
அதேபோல் குறித்த பகுதியினூடாக புளோரிடா மற்றும் கரேபியன் த{வுகளுக்கு பொழுதுபோக்கு வானூர்திகளும் இப்பகுதியினூடாகவே பயணித்த வண்ணம் உள்ளன.இதேவேளை புளோரிடா கரேபியன் த{வுகள் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்குச் செல்லும் அதிகளவான வர்த்தக மற்றும் தனியார் வானூர்திகள் குறித்த கடற் பகுதியினைக் கடந்தே பயணிக்கின்றன. ;
ஆனால் வேவுடா முக்கோணமென வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் செல்கின்ற எந்தவொரு பொருளும் இதுவரை கரை திரும்பவில்லை. அந்தப்பொருட்கள் கடலில் இருப்பதற்கான சான்றுகளும் இல்லை; இந்நிலையில் ஏனைய கடற்பகுதிகளில் சாதாரணமாக நிகழ்கின்ற நிகழ்வுகளே வேவுடா கடற் பகுதிகளில் நிலவுகின்றன. எனினும் குறித்த முக்கோண கடற்பரப்பு தொடர்பில் உலகின் பல்வேறு அறிஞர்கள் சமயவாதிகள் மற்றும் ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். சிலர் குறித்த பகுதியில் புவியீர்ப்;;;;;பு விசை இல்லையெனத் தெரிவிக்கின்றனர். சிலர் அப்பகுதியில் கடற் கொள்ளையர்கள் கடத்தல் காரர்கள் அல்லது யுத்த நோக்குடன் செயற்படும் சில குழுக்களால் அந்தப் பகுதிக்குள் செல்லுகின்ற கப்பல்கள் வானூர்திகள் என்பவற்றைக் கடத்துவதாகத் தெரிவிக்கின்றனர். சிலர் புராணக் கதைகளைக் காரணம் காட்டி வேவுடா முக்கோணப்பகுதியில் என்ன நடக்கின்றதென்பதை அப்பகுதியிலில் மர்மம் நிலவுவதை நியாயப்படுத்தியுள்ளனர்.
ஆனால் அப்பகுதியில் என்ன நடக்கின்றது என்னபதை யாராலும் தெளிவாக அறிய முடியவில்லை. காரணம் அந்த பகுதிக்குள் செல்கின்ற எந்தவொரு பொருளும் திரும்பி வராத நிலையில் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகள் வெற்றியளிக்குமா எனக் கேள்வியெழுகின்றது. அதேபோல் சில அறிவியல் ஆய்வாளர்கள் வேவுடா முக்கோணப்பகுதியில் கடக்கின்ற பொருட்கள் தொலைவதற்கான காரணம் மெதேன் ஐதரொட்சைட்; எனக் குறிப்பிடுகின்றனர். குறித்த முக்கோணக் கரையோரப் பகுதிகளில் இயற்கை எரியாயுவின் வடிவமான மெதேன் ஐதரொக்சைட்டுகள் காண்ப்படுவதாகவும் ந{ரின் அடர்த்தியை இவை குறைத்து ந{ர்க்குமிழிகள் குறிப்பிட்டவொரு வடிவமைப்பிற்குள் கொண்டு சென்று கப்பலை மூழ்கச்செய்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்கா ஆய்வாளர்களினது கருத்தின் படி வேவுடா முக்கோணப் பகுதியில் கடந்த 15 வருடங்களில் எரிவாயு ஐதரொக்சைட்டுகள் தொடர்பில் எந்நவொரு அறிகுறிகளும் இல்லையெனச் சுட்டிக்காட்டப் படுகின்றது.
இந்நிலையில் குறித்த கடற் பகுதிகளில் இராட்சத முரட்டு அலைகளின் தாக்குதலிற்குள்ளாகி கப்பல்கள் சிதைந்து போவதாக சில கருத்துக்களும் நிலவி வருகின்றன. ஆனால் இராட்சத அலைகள் கப்பல்களைச் சிதறடித்தாலும் வானில் பறக்கும் விமானங்களுக்கும் அதன் மறைவிற்கும் மர்மத்திற்கும் காரணமானதாக அமைவதில்லை. இதுவரை வேவுடா முக்கோப் பகுதியில் பல கப்பல்கள் விமானங்கள் வானூர்திகள் என்பன தொலைந்து போயுள்ளன.ஆனால் இவை சிதைவடைந்தமைக்கான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. உடைந்த கப்பல்களின் பாகங்களோ அல்லது அதில் பயணித்த மனிதர்களின் உடல்களோ இதுவரை கரையொதுங்கவுமில்லை.அந்தப்பகுதியினருகில் சென்றவர்களும் அவற்றைக் காணவுமில்லை.இதுதான் வேவுடா முக்கோணப் பகுதியின் மர்ம நிலையாகக் காணப்படுகின்றது. ஆரம்ப நிலையில் இப்பகுதியில் பயணம் செய்த மிகப்பெரியளவிலான கப்பல்கள் காணாமல் போயுள்ளன. அதைத் தொடர்ந்து அவற.றைத் தேடும் பணிக்காக அனுப்பப்பட்ட 4 விமானங்கள் மற்றும் 2 கப்பல்கள் காணாமற் போனமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் குறித்த தேவுடா முக்கோணப்பகுதிக்கு ஏவுகணை ஒன்றையும் செலுத்தியுள்ளனர்;. ஆனால் ஏவுகணை வெடிப்பிற்கு உள்ளாகாமல் அப்பகுதியில் மர்மமான முறையில் காணாமற் போயுள்ளமை அந்ந மர்மப்பகுதியின் மர்மராகவே உள்ளமை உலகின் பார்வையை மேலும் மிளிரச்செய்துள்ளது. பூமியில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத பல பிரதேசங்கள் இருந்தும் அவற்றைத் தேடப் பயணிக்கும் இத் தருணத்தில் பல வருடங்களாக மர்மத்தின் உறைவிடமாக இருக்கும் வேவுடா முக்கோண வலயம் உலகைத் தன் வசமாக வைத்திருக்கும் மனித ஜென்மத்தற்கு இயற்கை விடும் சவாலாகும். பூமியில் பிறந்த மனிதன் தனக்கு மேலுள்ள விண்வெளியின் கால நிலையை சொல்லுமளவிற்கு தனது அறிவுத்திறமையை மேம்படுத்தி வேற்று உலகத்தில் கால் தடம் பதித்தான். தான் வசிக்கும் பூமிக்குக் க{ழே காணப்படும் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் கண்டு பிடித்தான். நம்பிக்கையோடு காத்திருப்போம்.... அந்த வேவுடா முக்கோணத்தின் கோணத்தினை ஒரு நாள் அளவிட்டு மனிதன் மர்மத்திலும் வெற்றி பெறுவான்.
எழுத்துருவாக்கம்
திருமதி. துஷியந்தன் கிரிசாந்தினி
No comments:
Post a Comment