எப்பே பட்ட ஒரு மனிதனை ஒரு இனிiமையான சத்தத்தால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் ஓர் அத{த சக்தி இசைக்கே உண்டு. அதனால் இசை உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் கடவுளின் மொழியாக மாறியுள்ளது. அவ்வாறு அந்த இசையில் ஒவ்வொரு அங்கத்த்தையும் தொட்டு எமது காதோரம் சந்தம் பாடும் இசை ஜாம்பவான்கள் கடவுளின் தத்துப்கள். உலகில் பல இசை மேதைகளும் ஜாம்பவான்களும் உருவாகி இசையின் உன்னத தன்மைகளையும் அதன் தேவையையும் உணர்த்திச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து வழிநடத்தும் தற்கால இசை ;ஜாம்பவான்களும் எம்முன்னே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இசை ஜாம்பவான்களைத் தெரியப்படுத்தும் உன்னத சாதனமாக திரைப்படத்துறை இருக்கின்றது. அந்தத் திரைப்படத் துறையை தன்னுடைய இசையமைப்பால் மாத்திரம் இசையை ரசிக்க வைக்க முடியாது. அதன் ஒவ்வொரு அங்கத்தையும் தொட்டு கேட்போர் இதயத்தை வருடும் அளவிற்கு அந்த இசை அமைய வேண்டும். அப்படி திரையுலகினை இசையால் கட்டிப்போட்ட ஜாம்பவான்களில் இவரும் ஒருவர்.
வெள்ளை மழைத்துளி ரோஜாவில் விழுந்து முத்தாக மலர்ந்த இவர் இன்று கடல் போல் தன்னுடைய இசை ராஜ்யத்தை வளர்த்துக் கொண்டு உலகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்கவைத்து. இசையில் தென்றலாக வ{சி இப்போது புயலாகமாறி அனைவருடைய உள்ளங்களிலும் மையம் கொண்டு ஆர்ப்பரித்துள்ள இசைக்கே சொந்தக்காரர் ஆக எம்முன் வலம்வருபவர்தான்
ஏ. ஆர் ரகுமான்.
இவர் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி தமிழ் நாட்டின் சென்னையில் பிறந்தார். இவரது தந்தையான சேகர் மலையாளத் திரைப்படத் துறையில் சேவையாற்றியவராவார். ரகுமானின் இயற்பெயர் தில{ப்குமார் என்பதாகும்.சிறு வயதிலே தனது தந்தையை இழந்த ரகுமான் தனது குடும்பத்திற்கு வருமானம் இல்லாததன் காரணமாக தனது தந்தையினது இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைத்த வருமானத்தினைப் பெற்று பின் ஹார்மோனியம் மற்றும் கிற்றார் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார்.
நடராஜ் எனும் தனது குருவிடம் முறையாக இசையைப் பயின்ற திலிப்குமார் தனது 11ஆவது வயதில் அக்காலத்தில் இசைச் சக்கரவர்த்தியாக இருந்த இசைஞானி இளையராஜாவின் இசைக்கழுவில் க{போட் வாத்தியக் கலைஞனாக இணைந்து கொண்டார்;. பின்னர் எம். எஸ் விஸ்வநாதன், ரமேஷ்; நாயுடு, சாகிர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட இசை மேதைகளிடமும் திலிப்குமார் எனும் ஏ.ஆர் ரகுமான் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து கொலிஜ் ஒவ் மியூசிக்கில் இசையில் பட்டம் பெற்றார். இசையின் மேல் அதிகம் ஆர்வமும் வெறியும் கொண்டதால் இவர் பல கஸ்டங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும் தன்னை இசை உலகில் மிளிரச் செய்ய ஏ. ஆர். ரகுமான் தொடர்ந்து முயற்சிகளைச் செய்தார்.
இந் நிலையில் செரினா பானு என்பவரைத் திருமணம் செயது கொண்டார். 3குழந்தைகளும் உள்ளனர். தனது இசை ஆர்வத்தினால் கடந்த 1992 ஆம் ஆண்டில் தனது வ{ட்டிலேயே இசைப்பதிவு அரங்கம் ஒன்றினை அமைத்தார். இதனை ஆரம்பித்து வைத்த பெருமை இயக்குணர் மணிரத்தினத்தனையே சாரும். அதே ஆண்டில் மணிரத்தனம் இயக்கிய ரோஜா திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு ரகுமானிற்குக் கிடைத்தது. குறித்த வாய்ப்பானது தமிழ்த் திரைப்படத்; துறையினை வேறொரு கோணத்திற்குக் கொண்டு செல்லும் அளவிற்குப் பயன் படுத்தப் பட்டது. ரோஜா திரைப்படத்தின் இசை ரகுமான் இசை உலகின் ராஜா என்பதனை எடுத்துக்காட்டியது. முதல் திரைப்படத்திலேயே இத்தனை பாடல்களும் வெற்றியடைந்த நிலையில் அத் திரைப்படமானது ஏ.ஆர் ரகுமானுக்கு தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது.
இசையுலகினை சாதனையோடு ஆரம்பித்த ரகுமான் தனது தனது சாதனைப் பயணத்தனை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தார். ரோஜா திரைப்படத்தைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு வெளிவந்த மின்சாரக்கனவு 2002 ஆம் ஆண்டு வெளிவந்த லகான் என்னும் ஹிந்தித் திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்கள் இவருக்குத் தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது.
ஏ.ஆர் ரகுமானால் 2005 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட ஏ. எம் ஸ்ரூடியோ ஆசியாவிலேயே நவ{ன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்ட ஸ்ரூடியோவாகக் காணப்படுகின்றது. தமிழில் மட்டுமல்ல மலையாளம்,ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்து உலகிலுள்ள பல இசைப் பிரியர்களின் இதயங்களிலும் இடம் பிடித்தார்.
மேலும் இவருடைய இசை நுட்பத் ;திறமையால் இசை உலக ரசிகர்கள் மத்தியிலும் ந{ங்கா இடம் பிடித்தார ;. உலக அளவில் இவரின் இசையை வெளிக்கொணர்ந்த திரைப்படம் தான் ஸ்லம்டோக் மிலினர்..... என்னும் திரைப்படம். கடந்த 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற 81 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் குறித்த திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காகவும், ஜெய்கோ இசையமைத்துப் பாடியமைக்காகவும் ரகுமானிற்கு 2 ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் பேசும் ஒருவர் ஒஸ்கார் விருது பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் என்ற வரலாற்று ர{தியான சாதனைக்கு ஏ.ஆர் ரகுமான் சொந்தமானார். இவருக்கு ஹோல்ட் அன்ட் ஹோல்ட் விருது, ஒஸ்கார் விருது, தேசிய திரைப்பட விருது எனப் பல விருதுகள் வழங்கப் பட்டதோடு 2010 ஆம் ஆண்டு இந்திய அரசால் .இவருக்கு பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டது. இவ்வாறு ரகுமான் பல விருதுகளைத் தனது திறமையான இசையினால் தன் வசப் படுத்தனார.
தமிழ் திரைப்பட உலகில் பல இசையமைப்பாளர்கள் இன்றும் வலம் வந்து கொண்டிருந்தாலும் ஏ.ஆர் ரகுமானின் பாடல்களுக்கு இன்றும் தனியிடம் இருக்கின்றது. இவர் பொதுவாக இரவு வேளைகளிலேயே பாடல்களுக்கு இசையமைக்கும் பழக்கத்தனைக் கொண்டிருந்தார். இதுபோன்ற விடயங்கள் ரகுமானின் தனித்துவத்தைப் பேணுவதற்கு உதவியிருந்தன. ஏ.ஆர் ரகுமானிற்கு அதிக பாடல்களை எழுதிய பெருமை கவிப் பேரரசு வைரமுத்துவையே சாரும். இவர்களது கூட்டணி தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் பாடல்களைத் தந்துள்ளது.
குறுகிய காலத்தில் தனது இசையால் உலகைத் தன்வசப் படுத்திய ஏ.ஆர்.ரகுமான் 21 ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற இசையமைப்பாளராக வலம் வருகின்றார். எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக் கடலில் முத்தாகத் திகழ்ந்த ஒரு முத்து இன்று இசைக்கடலின் சொத்தாக மாறி உலக இசைத்துறையை தன்வசப்படுத்தி நாடி நரம்பெங்கும் இசை உணர்வைத் தூண்டும் மந்நிர இசைக்கு சொந்தமானவனாக மாற்றியுள்ளது.
திலிப்குமாராக இருந்து ரகுமானாக மாறிய இசைப்புயல் நாளைய இவ்வுலகை அதிசயிக்க வைக்குமளவிற்கு இசைச் சகாப்தமாக வளர வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் ஆவலும் எதிர்பார்ப்புமாகும்.
No comments:
Post a Comment